கடைமடைப்பகுதி குளங்கள், பாசனப் பகுதிகள் வறண்டு இருக்க, பேச்சிப்பாறை தண்ணீர் கடலுக்கு விடப்படுவது ஏன்? — நீர் வளத்துறையின் முறையற்ற நீர் மேலாண்மையின் வெளிப்பாடு!
பேச்சிப்பாறை அணையில் இருந்து வெள்ள எச்சரிக்கை என்ற பெயரில் தண்ணீர் கடலுக்கு விடப்படுவதை, உவகை ஆராய்ச்சி நிறுவனம் கடுமையாக கண்டிக்கிறது. கோதையாறு பகுதியின் கடைமடைப்பகுதியில் உள்ள ராதாபுரம் கால்வாய் வழியாக பாசனம் பெறும் 17,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், அதனுடன் தொடர்புடைய 52 குளங்களுக்கும் இன்னும் ஒரு துளி தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. நீர்வளத்துறை மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகங்கள், இந்த தண்ணீரை முறையாக நிர்வாகம் செய்து விவசாய உற்பத்தியை பெருக்குவது அவர்களின் கடமையாகும். 📄 முழு


